சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா! : சத்தியமா இது வில்லேஜ் படம் இல்லீங்க…

Get real time updates directly on you device, subscribe now.

nayan1

மாயா, தனி ஒருவன், நானும் ரவுடி தான் என தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களில் நடித்து வரும் நயன் தாராவுக்கு கோலிவுட்டில் திடீரென்று மவுசு எகிறியிருக்கிறது.

அதனால் தானோ என்னவோ விக்ரம் படத்தில் நடிக்க அவர் கேட்ட 3 கோடி சம்பளத்தைக் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டிருக்கிறார் புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு.

தற்போது நயன்தாரா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’, ‘திருநாள்’ ஆகிய படங்களும் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன

அதைத் தொடர்ந்து இயக்குநர் சற்குணம் தயாரிப்பிலும் நயன்தாரா கால்ஷுட் கொடுத்திருக்கிறார்.

Related Posts
1 of 39

இதுகுறித்து சற்குணம் மேலும் கூறியிருப்பதாவது : எனது தயாரிப்பு நிறுவனமான “A Sarkunam Cinemaz”ன் முதல் படமான ‘மஞ்சப்பை’ திரைப்படத்தை எனது உதவியாளர் ராகவன் இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது.

இதை தொடர்ந்து எனது நிறுவனத்தின் இரண்டாவது படத்தில் நடிகை நயன்தாரா முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இக்கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நான் இயக்கிய ‘களவாணி’ முதல் ‘சண்டிவீரன்’ வரை என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படம் திகிலூட்டும் கிரைம் த்ரில்லராக நகைச்சுவை கலந்த திரைக்கதையில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கப்படவுள்ளது. என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த நயனுக்கு ‘மாயா’ திரைப்படம் தான் திருப்புமுனையாக அமைந்தது. கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அந்தப்படத்தைத் தொடர்ந்து அதேபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த படம் அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.