அக்கா- அண்ணி- சித்தி : இருக்கவே இருக்கார் நஸ்ரியா!
‘நையாண்டி’ படத்தில் இத்துணூண்டு தொப்புள் மேட்டரை உலக லெவலுக்கு கொண்டு போய் கோடம்பாக்கத்தில் கதகளி ஆடியவர் நஸ்ரியா.
அந்த இம்சைக்காகவே அடுத்து அவரை எந்த இயக்குநரும் சீண்டவில்லை.
உடனே தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்று மலையாளப் படங்களில் நடிப்பை தொடர்ந்தார். அப்போது தான் பஹத் பாசிலை காதலித்து கடந்த ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் என்று கொடி பிடித்த நஸ்ரியாவை பஹத் வீட்டார் எச்சரிக்கவே நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு முழு நேர குடும்பத் தலைவியாகி விட்டார்.
திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகி விட்ட நிலையில் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார் நஸ்ரியா.
ஏதாவது விவகாரமா என்றால் அப்படியெல்லாம் பதறும் விஷயம் ஒன்றுமில்லை.
சின்ன வயதிலேயே திருமணம் செய்து விட்டதால் இன்னும் மூன்று நான்கு வருடங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைத்திருக்கிறாராம். கணவர் பகத்தும் படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த முடிவாம். அதோடு சரி நீயும் நடி என்று நஸ்ரியாவுக்கு ஆசைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார்.
இதனால் உற்சாகமடைந்திருக்கும் நஸ்ரியா தனக்குத் தெரிந்த இயக்குநர்களுக்கு போனைப் போட்டு சான்ஸ் கேட்டு வருகிறாராம்.