எல்லை மீறும் சன்னி லியோன்? : ஆவேசத்தில் பாலிவுட் நடிகைகள்
துண்டு துக்கடா துணிகளை கட்டிக்கொண்டு கவர்ச்சி காட்டி வந்த மல்லிகா செராவத் உள்ளிட்ட நடிகைகள் சன்னியின் வரவால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.
அமெரிக்க ஆபாசப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த சன்னி லியோனை பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இந்தியாவுக்கு கூட்டி வந்தார்கள். வந்தவரை அப்படியே பாலிவுட் வாரி அனைத்துக் கொண்டது.
அங்கே சொற்பக்காசுக்கே ஆடை துறந்தவர் என்பதால் இங்கே அவரை வைத்து கவர்ச்சிக் காட்சிகள் எடுப்பது வசதியாகி விட்டது.
இதனால் சன்னிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட வெலவெலத்துப் போனார்கள் பாலிவுட் கதாநாயகிகள்.
கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொண்டு தாராளமாக கவர்ச்சி காட்டுவதால் தங்கள் பிழைப்பு வெகுவாக பாதிக்கப்படுகிறது என்று புலம்பும் நடிகைகள் சன்னிலியோனை நாட்டை விட்டே துரத்த வேண்டும். அப்போது தான் எங்களால் பொழைக்க முடியும் என்று கூக்குரலிடுகிறார்கள்.
இதற்கிடையே சன்னிலியோன் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘மஸ்திஸாதே’ படத்துக்கு சென்சார் போர்டும், ரிவைஸிங் கமிட்டியும் ரிலீசுக்கு தடை விதித்து விட்டது. இப்போது அதை எதிர்த்து ட்ரிப்யூனல் போயிருக்கிறார்கள்.
சரி ஏன் படத்துக்கு தடை விதித்தார்கள் என்று கேட்பவர்கள் அந்தப்படத்தின் ட்ரெய்லரை யுடியூப்ல ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க…