அறிமுக டைரக்டருக்கு நம்பிக்கை கொடுத்த சிவகார்த்திகேயன்!
‘கனா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’.
அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் இப்படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து உருவாக்கியிருந்தோம்,
இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா? படத்தை தயாரிப்பாரா? என நான் சற்று சந்தேகப்பட்டேன்.
ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச்சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்திருக்கிறது” என்றார்.