16 புதிய தெலுங்கு படங்களின் OTT ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய Netflix!

Get real time updates directly on you device, subscribe now.

உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையைத் தரக்கூடிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தற்போது 2023-ல் தன்னிடம் உரிமம் இருக்கக்கூடிய 16 தெலுங்கு படங்களின் லைன்- அப் மற்றும் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர், இல்லத்திரைகளிலும் இந்தப் படங்கள் மக்களை மகிழ்விக்க இருக்கிறது. திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களை பார்த்து ரசித்த மக்கள் தற்போது வீட்டிலும் பார்த்து ரசிக்க இருக்கிறார்கள்.

சங்கராந்தி பண்டிகையை ஒட்டி இந்த புதிய 16 படங்களின் டைட்டில் க்ளிம்ப்ஸை நெட்ஃபிலிக்ஸ் தளம் தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ’ஆர்.ஆர்.ஆர்.’, ‘ஷ்யாம் ஷிங்கா ராய்’, ‘அண்டே சுந்தரன்கி’ உள்ளிட்டப் படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் இந்த வருடம் என்ன படங்கள் வெளியாக இருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

நெட்ஃபிலிக்ஸ் இந்தியா தளத்தின் கண்டெண்ட் VP மோனிகா ஷெர்கில் இனி வர இருக்கும் படங்களின் வரிசை குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “எங்களுடைய பார்வையாளர்கள் உள்ளூர் கதைகளில் இருந்து உலக கதைகள் வரை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டக்கூடியவர்கள். அதனால், அவர்கள் விரும்புவதைக் கொடுப்பதற்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ’ஆர்.ஆர்.ஆர்.’, ‘ஷ்யாம் ஷிங்கா ராய்’, ‘அண்டே சுந்தரன்கி’ உள்ளிட்டப் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு வரவேற்பு இருந்த நிலையில், தற்போது புதிய தெலுங்கு படங்களின் வரிசையை பார்வையாளர்களுக்கு அறிவிக்க இருக்கிறோம்.

இந்த புதிய ஸ்லாட் பல்வேறு வகைகளிலான புதிய ஜானர்களில் படங்களைக் கொண்டு வருவதுடன் தென்னிந்தியாவில் இருந்து பல திறமைகளையும் வெளிக்கொண்டு வர வழிவகுக்கும். டப்பிங் மற்றும் திரைக்குப் பின்னால் நாங்கள் செய்யும் வேலைகளின் மூலம் இந்தப் படங்களை இந்தியா முழுவதும் மற்றும் உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் கொண்டு சேர்க்க முடிகிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.