போடுங்கம்மா ஓட்டு..! நியூஸ்18 சேனலின் தேர்தல் விழா!

Get real time updates directly on you device, subscribe now.

பொதுவாக தேர்தல் என்றாலே மற்ற மாநிலங்களில் அடிதடி… வெட்டுகுத்து…நக்சலைட் பிரச்சினை என்று ஏராளமான பதற்றங்கள் இருக்கும். ஆனால் தமிழ்நாடு பாண்டிச்சேரியில் தேர்தல் என்றாலே ஜனநாயக திருவிழாதான். ஆடல் பாடல் என களை கட்டும். அதுவும் இப்ப இருக்கிற டிவி யுகத்தில் ஆட்களை கூட்டுவது…. அவர்களை தக்க வைப்பது அரசியல்வாதிகளுக்கு சவாலான விஷயம். அப்படிப்பட்ட தேர்தல் திருவிழாவில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்… மேடையில் மட்டுமன்றி மேடையை சுற்றிலும் நடக்கும் வித்தியாசமான விநோத நிகழ்வுகளின் தொகுப்புதான் போடுங்கம்மா ஓட்டு நிகழ்ச்சி.

கலகலப்பான போடுங்கம்மா ஓட்டு நிகழ்ச்சி நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மறு ஒளிபரப்பு மறுநாள் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.