ஆக்சன் காட்சிகளுக்காக 2 மாதங்கள் வரை என்னை தயார்படுத்தி கொண்டேன் -கத்ரீனா கைப் !

Get real time updates directly on you device, subscribe now.

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசை படங்களில் முதன் பெண் உளவாளியான, கத்ரீனா கைப் நடிக்கின்ற சோயா என்கிற கதாபாத்திரம் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவல் ஒவ்வொரு ஒரு அடியிலும் ஆணுக்கு சமமாக காட்டப்பட்டு வருகிறது.. சண்டை என வந்துவிட்டால் எந்த அளவுக்கும் இறங்கி ஒரு கை பார்க்கும் அளவுக்கு அவள் கடுமையான, புத்திசாலித்தனமான மற்றும் கொடுமையான உளவாளி.

கத்ரீனா சோயா கதாபாத்திரத்தை தானாகவே சொந்தமாக உருவாக்கியிருக்கிறார் என்பதுடன் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு டைகர் படத்திலும் அவரது கதாபாத்திரத்தை தவறாமல் உச்சநிலைக்கு எடுத்து செல்கிறார்கள். நம்பமுடியாத சண்டை காட்சிகளை செய்துள்ளதற்காக கத்ரீனா கைப் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இதுவரை வெள்ளித்திரையில் வேறெந்த பெண்ணும் செய்திராத அளவுக்கு ஒத்தைக்கு ஒத்தை மோதும் ஆக்சன் காட்சிகளையும் செய்திருக்கிறார். ‘டைகர் 3’யில் இந்த மிகப்பெரிய ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு தயாராவதற்கு கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை அவர் பயிற்சியும் ஒத்திகையும் எடுத்துக்கொண்டு தயாராகியுள்ளார்.

Related Posts
1 of 2

கத்ரீனா கூறும்போது, “’டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக குறைந்தது இரண்டு மாதங்களாவது என்னை தயார்படுத்திக்கொண்டேன். ஒரு சுறுசுறுப்பானவளாக, அதிவேகம் கொண்டவளாக, மிகப்பெரிய பலம் கொண்டவளாக சோயா இருக்கவேண்டும் என நாங்கள் விரும்பினோம். சோயா செய்திருக்கும் ஆக்சன் காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது உண்மையிலேயே நானும் அதனுடன் சேர்ந்து சுழல வேண்டி இருந்தது என்பதையும் என்னுடைய திரையுலக பயணத்திலேயே மிகவும் கடினமான பயிற்சியாகவும் அது இருந்தது என்பதையும் இதுபோன்ற காட்சிகள் இதற்கு முன்னாள் எந்த ஒரு பெண்ணும் முயற்சித்ததில்லை என்பதையும் நீங்கள் உணர்வீர்கள்” என்கிறார்.

மேலும் அவர் கூறும்போது, “உலகிலேயே மிகச்சிறந்த சண்டைப்பயிற்சி குழுவால் செயல்படுத்தப்பட்ட இந்த ஆக்சன் காட்சிகளை பெரிய திரையில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க இருப்பதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்கிறார்.

ஆதித்யா சோப்ராவால் தயாரிக்கப்பட்டு, மனீஷ் சர்மாவால் இயக்கப்பட்டுள்ள இந்தப்படம் வரும் தீபாவளி வெளியீடாக நவ-12 ஞாயிறன்று வெளியாக இருக்கிறது.