பஹத் பாசில் நஸ்ரியா நடிக்கும் ‘நிலை மறந்தவன்’!
தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15-ல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். புஷ்பா மற்றும் விக்ரம் படங்களின் வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாகிறது.
ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.