அஜித்தே கூப்பிட்டார்ல… : ‘ஏ கே 57’ வில்லன் அரவிந்த்சாமி!

Get real time updates directly on you device, subscribe now.

ajith

ஜித் பாஸ்போர்ட் ஆபீஸூக்கு தன் மகனோடு வந்தாலே அதை போட்டோ எடுத்து ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வந்து விடுவார்கள் அவரது ரசிகர்கள்.

அப்படிப்பட்டவர் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்குமா என்ன?

சென்ற வாரம் அஜித்தின் 57-வது படத்துக்கு பூஜை போட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் இனி அந்தப்படம் ரிலீசாகும் வரை அஜித் தல முடி விழுந்தால் கூட அது அவரது ரசிகர்களுக்கு உற்சாக செய்தி தான்.

இப்படி 57-வது படத்தின் புத்தம் புதிய விஷயங்களை தினமும் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருக்கிறார்கள்.

இதோ அவர்களுக்காக இந்த செய்தி!

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கு 57வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்கிற விபரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Related Posts
1 of 59

முதலில் அனுஷ்கா என்றார்கள், பிறகு காஜல் அகர்வால் என்றார்கள். இப்போதும் அவரே டவுட் லிஸ்ட்டில் தான் இருக்கிறார்.

இப்படி நாயகி பற்றிய விபரம் பலவிதமாக வந்து கொண்டிருந்தாலும் படத்தில் இணையும் இன்னொரு நடிகரைப் பற்றிய செய்தி தான் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

தனி ஒருவனில் வில்லனாக கலக்கிய அரவிந்த் சாமி ஜெயம் ரவியின் போகன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களைத் தவிர அஜித்தின் 57-வது படத்திலும் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

தனி ஒருவனில் அரவிந்த் சாமியின் அசால்ட்டான நடிப்பைப் பார்த்து வியந்து போன அஜித் தான் இயக்குநர் சிவாவிடம் அரவிந்த் சாமியை கமிட் செய்யச் சொன்னதாகத் தெரிகிறது. அதோடு, சினேகாவின் கணவர் பிரசன்னாவும் ஏ.கே 57-வது படத்தில் ஒரு வில்லனாக வந்தாலும் வரலாம்.

ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தில் வில்லனாக நடித்த அனுபவம் இருப்பதாலும், இப்போதைக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாததாலும் அஜித் பட வாய்ப்பை ஏன் தவற விடுவானேன் என்று ஓ.கே சொல்லும் முடிவில் இருக்கிறாராம் பிரசன்னா.

தெறிக்க விடுங்க…