நயன்தாரா எப்படி ஓ.கே சொன்னார்? : ரசிகர்கள் அதிர்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

nayanthara

முப்பதை வயதைத் தாண்டிய பல நடிகைகள் திருமணம், குழந்தை, குடும்ப வாழ்க்கை என்று செட்டிலாகி விட்டார்கள். ஆனால் இப்போதும் தமிழ்சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

அவர் தேர்ந்தெடுத்து நடிக்கின்ற படங்கள் ரசிகர்களுக்கு வித்தியாசமான ரசனைக்கு கியாரண்டியாக இருந்தாலும், செண்டிமெண்ட்டாக படங்கள் ஹிட்டாவதும் இளம் ஹீரோக்களும் அவருடன் ஜோடி சேர ஆசைப்படுவதும் மார்க்கெட் ஸ்டெடியாக இருப்பதற்கு முக்கிய காரணங்கள்.

அதிலும் சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா புதிதாக ஒரு படத்தை கமிட் செய்திருப்பது தான் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

Related Posts
1 of 72

ஆமாம், அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘டிமாண்டி காலனி’ இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்தப்படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார் நயன்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் நயன் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்? என்று யோசித்துக் கொண்டிருக்க, நயனோ நன்றாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.

படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நடித்தாலும் அவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதியும் வருகிறாராம். ஏற்கனவே ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்துக்குப் பிறகு இந்தப்படத்தில் அவரோடு ஜோடி சேர்கிறார். ஆக நயன் கேரக்டர் பேசப்படும் கேரக்டராக இருக்கும் என்பது மட்டும் உறுதியாம்.

அப்பாடா… இப்பத்தான் ரசிகர்களுக்கு சந்தோஷம்!