நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்- விமர்சனம்

காதலும் சேர்தலும் பிரிதலுமாய் வந்திருக்கும் ஒரு வழக்கமான காதல் படம்
தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமான இப்படத்தை தனுஷ் எழுதி இயக்கியுள்ளார். கதைப்படி பவிஷ் ஒரு ஸ்டுடண்ட் செப். அனிகா சரத்குமாரின் ஒரே மகள். பெரும் கோடீஸ்வரரும் கூட. அனிகாவிற்கும் பவிஷுக்கும் அந்தஸ்தில் பொருத்தமில்லை என சரத்குமார் நினைத்து ஒரு முடிவை எடுக்கிறார். மனதின் பொருத்தமே முக்கியமென பவிஷ் அனிகா ஜோடி நினைக்கிறது. இடையில் வரும் ஒரு எமோஷ்னல் காரணத்திற்காக அனிகாவை விட்டுப் பிரிகிறார் பவிஷ். பிரிந்த ஜோடி இணைந்ததா? என்பதே கதை
முதல் படம் என்ற சுவடு தெரிந்தாலும் ஓரளவு சமாளிக்கிறார் அறிமுக நாயகன் பவிஷ். அனிகா குழந்தை முதலே நடித்து வருகிறார். அவர் ஒரு ஹீரோயின் மெட்டிரியலாக மாற இன்னமும் மெனக்கெடல் வேண்டும். மாத்தேவ் தாமஸ் தான் படத்தின் பெருந்தூண் எனலாம். ஆங்காங்கே அவர் அடிக்கும் பன்ச்கள் தான் படம் பஞ்சராகும் போதெல்லாம் காப்பாற்றுகிறது. சரத்குமார் கெளரவ தோற்றத்திற்கு ஏற்ப கெளரவமாக நடித்துள்ளார். சரண்யா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டவர்கள் சின்னதாக அட்டர்னென்ஸ் போடுகிறார்கள்.
படத்தை தேங்க விடாமல் நகர்த்த ஜிவி பிரகாஷின் இசை பெரிதாக உதவியுள்ளது. பாடல்களிலும் துள்ளல் தெறிக்கிறது. ஒளிப்பதிவாளர் பின்பாதியில் கோவாவை கண்முன் நிறுத்துகிறார்.
படத்தின் கதையை தனுஷ் பழையதாக எழுதியிருந்தாலும், திரைக்கதையை ஓரளவு பிரஷ்-ஆக அமைத்துள்ளார். இருந்தாலும் முன்பாதி மொத்தமும் கிரிஞ்ச் டைப். பின்பாதியில் படம் கலகலவென நகர்கிறது. ஒரு நல்ல காதல் படத்தை எதிர்பாராமல், சின்னதாக ஒரு எண்டெர்டெயின்மெண்ட் படம் என மனதில் நினைத்துச் சென்றால் படம் நம்மை கோபமடையச் செய்யாது
2.75/5