டிராகன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

“நேர்மை தான் வெற்றி. அதை நோக்கிய பயணம் தான் மகிழ்ச்சி” என்கிறான் டிராகன்

ஹீரோ பிரதீப் காலேஜில் ஒரு வேஸ்ட் பீஸாக சுற்றுகிறார். இப்படியிருக்கும் பிரதீப்-ஐ காலேஜில் சுற்றிவந்த காதலி, பிரதீப்பின் டிஸ்கண்டினியூ டிகிரி முதல், வேலைவெட்டி இல்லாத நிலை ஆகியவற்றைப் பார்த்ததும் அவரை நிராகரிக்கிறார். அதனால் மனமுடையும் பிரதீப் வெற்றிகரமான வாழ்வை வாழ குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறார். அது அவர் வாழ்வில் என்னென்ன வலிகளை கொடுத்தது என்பதை சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் படமாக்கியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து

நடிகராக பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் இன்னும் ஒருபடி மேல் ஏறியுள்ளார். அசத்தலான நடிப்பு..அனுபமா பரமேஸ்வரன் மனதை கொள்ளை கொள்கிறார் என்றால், காயுடு லோகரா கிறங்க வைக்கிறார். மிஷ்கின் கிடைக்கும் எல்லாக் காட்சிகளையும் கேட்ச் செய்கிறார். கெளதம் மெனேன், ஜார்ஜ் மரியான் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்

ஒளிப்பதிவாளர் காட்சிகளுக்கு இயல்பான வண்ணம் கூட்டியுள்ளார். DI கலரிங் வேலையும் சிறப்பாக அமைந்துள்ளது. லயன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே வொர்க் ஆகியுள்ளது

தவறான பாதை எப்போதுமே நிம்மதி குலைக்க வைக்கும்..இங்கு தவறு செய்யும் பலரும் வெளியில் பகட்டாக வாழ்ந்தாலும், உள்ளுக்குள் நிம்மதியற்றே வாழ்வார்கள் என்ற கருத்தை ஆணித்தரமாக படம் பேசியுள்ளது. ஒரு தேர்ந்த திரைக்கதைக்கான எல்லா அம்சங்களும் படத்தில் தெரிகிறது. முதல் இருபது நிமிடமும், சிலபல லாஜிக் கேள்விகளையும் படம் பேசி நிற்கும் அறத்திற்காக மறந்து விடலாம்.

டிராகன்- Sure shot
3.25/5