கவர்ச்சி காட்டுவதில் கடுப்பு! : டைரக்டருடன் காஜல் அகர்வால் மோதல்

முன்னணி நடிகைகளுக்கு மத்தியில் பட வாய்ப்புகளை பிடிக்க மிகப்பெரிய போட்டியே நடந்து வருகிறது. இதற்காக டாப் லெஸ் ஆகக் கூட துணிந்து நடிக்க முன் வந்து விட்டார்கள்.
இந்த லிஸ்ட்டில் அதிகம் கவர்ச்சி காட்டாமலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் காலத்தை ஓட்டி வந்த காஜல் அகர்வாலும் புதுமுக நடிகைகளின் கவர்ச்சிப் போட்டியை சமாளிக்க முடியாமல் இப்போது கவர்ச்சி கோதாவில் இறங்கியிருக்கிறார்.
ஆனால் இது கொஞ்சம் ஓவராக இருக்கே…? என்று எரிச்சல்படுகிற அளவுக்குப் போய் இப்போது டைரக்டருடன் மோதல் ஆகிற அளவுக்கு பஞ்சாயத்தாகி நிற்கிறது.
தமிழில் காஜல் கவர்ச்சிக்கு பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் தெலுங்கில் அவருடைய கவர்ச்சிக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
இதை மனதில் வைத்து ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட காஜலை கமிட் செய்தார் அப்படத்தின் இயக்குநர் கொரட்டாலா சிவா.
அந்தப் பாடல் காட்சியில் பயன்படுத்தப்படும் நான்கு காஸ்ட்யூம்களின் ஒரு காஸ்ட்யூம் மட்டுமே கவர்ச்சி காட்டுவேன் என்று சொல்லி ஆடினார் காஜல்.
ஆனால் எடுத்த வரை பார்த்தபோது டைரக்டருக்கு திருப்தி இல்லை. இதனால் மற்ற மூன்று காஸ்ட்யூம்களையும் கவர்ச்சியாக போட்டு வரச்சொல்ல டைரக்டருடன் மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறி விட்டாராம் காஜல்.
பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. அவரை சமாதானப்படுத்தி பாடல் காட்சியை எடுத்து முடிக்க படக்குழு தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
எதுக்கு சம்மதிக்கணும்..? எதுக்கு சங்கடப்படணும்..?