ரிவைசிங் கமிட்டிக்குப் போகும் காஜல் அகர்வாலின் ‘பாரீஸ் பாரீஸ்’
ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் மிகப்பெரியப் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்.
தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில் ‘தட்ஸ் மகாலட்சுமி’ எனவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் ‘பட்டர்ஃபிளை’ எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘ஜாம் ஜாம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
கன்னடத்திலும், மலையாளத்திலும் இப்படத்துக்கு சென்சார் கிடைத்த நிலையில், தமிழ் ரீமேக்கான ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படத்திற்கு மட்டும் சென்சார் கிடைக்கவில்லை. மாறாக சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தில் பல ஆடியோ, வீடியோ காட்சிகளை நீக்கும்படி பரிந்துரைத்திருக்கிறது.
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத படக்குழுவினர் படத்தை ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்து செல்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.