மாரிசெல்வராஜ் வெளியிட்ட ‘நூடுல்ஸ்’!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Related Posts
1 of 4

மதன் தக்‌ஷிணாமூர்த்தி இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெளடிபேபி புகழ் S.J. ஆழியா, அருவி படப்புகழ் திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜூக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் பிரக்னா அருண் பிரகாஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார், அவருடன் சுருளி ராஜா டிஎம் மற்றும் வசந்தமாரிமுத்து இணைந்து தயாரிக்கின்றனர்.V ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் அனைத்து வகையான வெளியீட்டு உரிமைகள் உட்பட உலகளாவிய வெளியீட்டைப் பெற்றுள்ளது.