‘100’ படத்துக்கு தியேட்டர்கள், காட்சிகள் அதிகரிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

ல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெரும். அந்த வரிசையில் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வாவும், ஹன்சிகாவும் இணைந்து நடித்த ”100” படம் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றதால் அந்தப் படத்துக்கு தியேட்டர்களும், காட்சிகளும் அதிகரித்துள்ளன.

இந்த வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் காவியா வேணுகோபால் கூறும்போது, “எல்லா இடங்களிலும் இருந்து பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்து கொண்டிருக்கிறோம்.

விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என இரு தரப்பிலும் இருந்து தொலைபேசியில் அழைத்து படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்கள்.

Related Posts
1 of 134

அவர்களது வாய்மொழி பாராட்டை விடவும், இந்த படத்திற்காக 50 காட்சிகள் மற்றும் 25 திரையரங்குகள் அதிகரித்துள்ளன என்பதில் பெருமிதம் கொள்கிறோம். பொதுவாக, முதல் வாரத்தில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, முதல் மூன்று நாட்களை விட குறைவாக தான் இருக்கும். ஆனால், இங்கு அது தினம் தினம் அதிகரித்து வருவதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

திரைப்படத்தின் கருப்பொருளும், சாம் ஆண்டன் அதை வணிக ரீதியான முறையில் கொடுத்ததும் மிகச்சிறப்பாக, படத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. கூடுதலாக, அதர்வா முரளியின் திரை ஆளுமையும் படத்துக்கு மதிப்பு சேர்த்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தின் உணர்வுபூர்வமான அம்சங்கள் குடும்ப ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது” என்றார்.