ஓ மை கடவுளே- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING 3.5/5

கடவுள் நம் கையில் என்ன தந்திருக்கிறார் என்பதை உற்றுப் பார்க்காமலே கடவுளை குறை சொல்வதோடு அல்லாமல் நமக்கான சோகத்தை நாமே தேடிக்கொள்கிறோம் என்பதை கமர்சியலாக சொல்லி இருக்கிறது ஓ மை கடவுளே.

துறுதுறு அஷோக்செல்வனுக்கு ரித்திகா சிங் நல்ல தோழி. ஒருநாள் ரித்திகா சிங் அஷோக்செல்வனிடம் நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்க அஷோக்கும் சரி என்கிறார். ஆனால் கல்யாண லைப் எதிர்பார்த்தது போல அமையவில்லை. அஷோக் கடவுளிடம் முறையிட கடவுள் அஷோக்கிற்கு என்ன செய்தார்? இதுதான் கதை.

வெகு சாதாரண லைனை வைத்து கலகல ட்ரீட்மெண்டால் படத்தை என்கேஜிங்காக வைத்திருக்கிறார் இயக்குநர் அஸ்வத். சின்னச் சின்ன வசனங்கள் ஒவ்வொரு காட்சிகளுக்குமான தொடர்பு, எதிர்பாராத சிறுசிறு ட்விட்ஸ்கள், என படம் பிசிறடிக்காமல் பயணிக்கிறது. இதுதான் படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட்.

அடுத்து நடிகர்களின் பங்களிப்பு. அஷோக்செல்வன் நடிப்பில் பாஸ்மார்க் வாங்கி இருக்கிறார் என்றால் ரித்திகா சிங் மாஸ் காட்டி இருக்கிறார். எமோஷ்னல் ப்ளஸ் காதல் காட்சிகளில் கலக்கி இருக்கிறார். வாணிபோஜன் கேரக்டரும் அதில் அவர் காட்டி இருக்கும் நடிப்பும் நகலில்லா அசல். ஷாரா, எம்.எஸ் பாஸ்கர், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பிலும் குறைகாண முடியவில்லை. ஒவ்வொரு கேரக்டர்களுக்கான ரைட்டிங்கும் பவர்ஃபுல்-ஆக இருக்கிறது.

ஒளிப்பதிவின் தனிப்பதிவாக எதைப்பார்க்க வேண்டும் என்றால் லைட்டிங் ஏரியா தான். படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் பார்-சீனில் கேமரா மேன் விது ஐய்யன்னாஅதகள லைட்டிங் அமைத்திருக்கிறார். லியோன் ஜேம்ஸின் பின்னணி இசையோடு பாடல்களும் சிறப்புச் சேர்த்துள்ளது. என்ன தான் இப்படி ப்ளஸ் பாயிண்ட்ஸை அடுக்கினாலும் முன்பாதியில் படம் சில இடங்களில் டல் அடிப்பதும் உண்டு. ஆழமான ஒரு தத்துவத்தை விஜய்சேதுபதி கேரக்டரை வைத்து சொல்லி இருக்கும் இயக்குநர் படத்தின் நீளத்தை எடிட்டரோடு இணைந்து குறைத்திருக்கலாம். படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி வருகிறார். அந்த ஏரியாவும் அட்டகாசம். சிற்சில குறைகள் இருந்தாலும் படமும் அட்டகாசம்