நான் சிரித்தால்- விமர்சனம்
RATING 3/5
சோகம் நம்மை வச்சி செய்யும் போதெல்லாம் நமக்கு சிரிப்பு வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் விரக்திச் சிரிப்பு அல்ல..வாய்விட்டுச் சிரிக்கும் வெடிச் சிரிப்பு!!! நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு விசயத்தைக் கதையாக கையில் எடுத்து நான் சிரித்தால் என படமாக தந்துள்ளார் அறிமுக இயக்குநர் ராணா.
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படம் என்பதை விட ஆதி சிரிக்கும் படம் என சொல்லலாம். படம் நெடுக சிரித்தே நடித்துள்ளார். படத்தில் வில்லனாக வரும் ரவிமரியாவும் சிரிக்க வைக்கிறார் என்பது கூடுதல் ப்ளஸ் பாயிண்ட். கே.எஸ்.ரவிக்குமார் கெத்து தாதாவாக வந்து ஒரு தத்துவ முத்தை உதிர்த்துவிட்டுப் போகிறார். நாயகி ஐஸ்வர்யா மேனென் ஆளைப் போல நடிப்பும் ஓ.கே ரகம். ஷாரா, முனிஷ்காந்த், படவா கோபி, க்ளைமாக்ஸில் வரும் யோகிபாபு என படத்தில் நட்சத்திரப் பட்டாளம் நிறைய. எல்லோருமே தங்கள் பங்கிற்கு ஜொலித்துள்ளார்கள்.
நடிப்பைப் போல பின்னணி இசையிலும் கதைக்கான உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார் ஹிப்ஹாப். என்ன படத்துல வர்ற பாடல்கள் லிஸ்ட் தான் ஓ ஓ ஓவர். சிம்பிளான ஒளிப்பதிவும் நச். காமெடி வசனங்கள் ஓரளவு காப்பாற்றியுள்ளன.
படத்தின் நீளத்தை குறைத்து பின்பாதியில் வரும் நகைச்சுவை ஏரியாவை இன்னும் அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் அதிகமாகச் சிரித்திருக்கலாம்