டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும்‘ஆஃபீஸ் பாட்டு’!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது.

விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தை, அதன் மையத்தை, நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான பாடலாக இந்த டைட்டில் டிராக் உருவாகியுள்ளது. ‘ஆஃபீஸ் பாட்டு’. கேட்கும் அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்து, அவர்களைத் திருப்தி அடையச் செய்யும் பாடலாக அமைந்துள்ளது.

பெப்பி ஜானரில் உருவாகியுள்ள இப்பாடலை ஃப்ளுட் நவீன் இசையில், முகேஷ் பாடியுள்ளார்.
நகைச்சுவையுடன் கூடிய கலகலப்பான இந்த சீரிஸை, கபீஸ் இயக்கியுள்ளார், ஜெகன்நாத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸான ​​‘ஹார்ட் பீட்’ இல் தங்கள் நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ள இருவர் இடம்பெற்றுள்ளனர்.

​​‘ஹார்ட் பீட்’ சீரிஸில் நடித்த நடிகர்கள் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் இந்த சீரிஸில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா ஆகியோருடன் அரவிந்த், “பிராங்க்ஸ்டர்” ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

சமீபத்திய, ‘ஹார்ட் பீட்’ சீரிஸை ரசித்தவர்கள், இந்த ‘ஆஃபீஸ்’ சீரிஸைக் கொண்டாடுவார்கள். இந்த ஆஃபீஸ் சீரிஸின் கதை, ஒரு சிறிய, அழகான கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும், அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பின்னணியில், ஒரு அரசு அலுவலகத்தில் நடக்கும் நகைச்சுவையான நிகழ்வுகளும், வித்தியாசமான சம்பவங்களும், பார்வையாளர்களைச் சிரிப்பில் ஆழ்த்துவது உறுதி. இந்த ஆஃபீஸ் சீரிஸின் ஒவ்வொரு அத்தியாயமும் அசத்தலான நகைச்சுவையால் நிரம்பியுள்ளது. மனம் விட்டுச் சிரித்து மகிழ, ஒரு அட்டகாசமான சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.