மீண்டும் சிவாவுடன் கூட்டணி – ரசிகர்களின் கதறலை கண்டுகொள்ளாத அஜித்!

Get real time updates directly on you device, subscribe now.

ajith1

ஜித் நடித்த படங்களில் அதிகப்படியான நெகட்டீவ் விமர்சனங்களோடு தோல்விப்படம் என்கிற பெயரை சம்பாதித்த படம் ‘விவேகம்.’

இருந்தாலும் அதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார் அஜித்.

இந்தப் படத்தை யார் வேண்டுமானாலும் இயக்கட்டும், ஆனால் தயவு செய்து சிறுத்தை சிவா மட்டும் வேண்டாம் என்பது தான் ரசிகர்களின் ஏகோபித்த கருத்தாக இருந்தது.

அந்தளவுக்கு விவேகம் படத்தின் தோல்வி அந்தப் படத்தை இயக்கிய சிவா மீது ரசிகர்களை பாய வைத்தது.

இதனால் விஷ்ணுவர்தன் அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் இருவரில் யாராவது ஒருவரை இயக்குநராகப் போடுங்கள் என்று கதறியபடி சமூக வலைத்தளங்களில் அஜித்துக்கு கோரிக்கை வைத்தார்கள் அஜித் ரசிகர்கள்.

Related Posts
1 of 56

என்ன செய்வது? அஜித் தான் வெளியுலகத்தை எட்டிப் பார்ப்பதே இல்லையே? அப்படியிருக்கும் போது ரசிகர்களின் கதறல் அவருக்கு கேட்குமா என்ன?

 ரசிகர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவராக விவேகம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் இயக்குநர் சிவாவுக்கே கொடுத்திருக்கிறார் அஜித். இயக்கத்துக்கு சிவாவை டிக் செய்தாலும் இசையமைப்பாளரை மாற்றி விட்டார். அனிருத்துக்கு பதிலாக யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகியிருக்கிறார்.

ஆரம்பக்கட்ட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. நாம் ஓடி விட நினைத்தாலும் அஜித் நம்மை விட மாட்டார் போலிருக்கிறதே? என்று நொந்து கொண்டே கதை, திரைக்கதை உள்ளிட்ட இத்யாதி வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார் சிவா.

அஜித் படம் எப்போதுமே ஏதாவது விசேஷ நாளில் தான் ரிலீசாகும். அந்த வகையில் இந்தப்படத்தையும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

படம் எப்படியிருக்குமோ? என்கிற ஆவலோடும், அதிர்ச்சியோடும் காத்துக்கிடக்க ஆரம்பித்து விட்டார்கள் அஜித் ரசிகர்கள்.