400 பிளஸ் தியேட்டர்களில் ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்!

விஜய் சேதுபதி – கெளதம் கார்த்திக் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
முழுக்க முழுக்க குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் காமெடிப் படமாக தயாராகியிருக்கும் இப் படத்தை தமிழகமெங்கும் 400-க்கும் அதிகமான தியேட்டர்களில் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி ‘கிளாப்போர்ட் நிறுவனம் சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்.
”இதுவரை நான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு விஜய் சேதுபதி சார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி, விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று முழுமையாக நம்புகிறேன்.
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதிக்க இருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘மினிமம் காரண்ட்டி’ முறையில் வாங்கி இருப்பது பெருமையாக இருக்கின்றது. வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி அனைவருக்கும் நல்ல நாளாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் வி சத்யமூர்த்தி.