அஜித் பட இயக்குநருடன் இணையும் ‘ஒரு முகத்திரை’ நாயகன் சுரேஸ்!
சமீபத்தில் ரிலீசான படங்களில் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களின் கவனம் ஈர்த்த படம் ‘ஒரு முகத்திரை’
இதில் ரகுமான் ஒரு ஹீரோ என்றால் இன்னொரு ஹீரோவாக ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்திருந்தார் புதுமுக நாயகன் சுரேஸ்.
படத்தில் ஐடி கம்பெனியில் தன்னோடு வேலை செய்யும் தேவிகாவை காதலித்து அந்தக் காதலை அவர் உதாசீனப்படுத்தவும் அதனால் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை வரை செல்வார்,
பின்னர் மனநல மருத்துவர் ரகுமானால் குணமாக்கப்பட்டு, அவருக்காகவே ஒரு கொலையையும் செய்யத் துணியும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
காதலிக்கும் போது ஒரு கெட்டப்பிலும், காதலில் தோல்வியுற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக ஒரு கெட்டப்பிலும் என இரண்டு விதமான கெட்டப்புகளில் வந்திருப்பார்.
முதல் படத்திலேயே இப்படி இரு வேறு கெட்டப்புகள் கிடைத்தது தன்னுடைய நடிப்புத் திறமைக்கு சவாலாக இருந்தது என்றும், படத்தில் அப்படி நான் வந்த இரண்டு விதமான கேரக்டர்களையும் பார்த்தவர்கள் தன்னை மனம் திறந்து பாராட்டியதாகச் சொல்கிறார் சுரேஸ்.
சுரேஸுக்கு தமிழில் முதல் அறிமுகம் என்றாலும் அவருடைய குடும்பம் சினிமா பின்னணி கொண்ட மலேசியக் குடும்பம் தானாம்.
மலேசியாவில் பல ஆண்டுகளாக தமிழ்ப்படங்களையும், ஆங்கிலப் படங்களையும் வெளியிடுவதும், அங்குள்ள சேனல்களுக்கு மலேசியத் தமிழ்ப்படங்களையும் தயாரித்து கொடுத்து வருகிறார்கள். இந்த ஒரு பின்னணி போதாதா? குடும்பத் தொழிலையே செய்து விட்டு போகலாம் என்பதை விட தமிழ்சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாகவே சுரேஸ் மனதில் இருந்திருக்கிறது. அதற்கு வாய்ப்பாக அமைந்தது தான் ஒரு முகத்திரை படம்.
இந்தப் படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட கேரக்டருக்கு வித்தியாசம் வேண்டும் என்பதால் டைரக்டர் என்னை முடி வளர்க்கச் சொல்லியிருந்தார். அதற்காக மூன்று மாதங்கள் வரை காத்திருந்து முடி வளர்ந்த பிறகு தான் என்னுடைய காட்சிகளையே படமாக்கினார் என்று சொல்லும் சுரேஸ்
நடிகர் ரகுமானுக்கும் நன்றி சொல்ல மறக்கவில்லை. ரகுமான் சார் ஒரு சீனியர் நடிகர். இந்தப் படத்துல ஒரு புதுமுகம் தான் ஹீரோன்னு சொல்லியும் அதையெல்லாம் பார்க்காமல் அவருடைய கேரக்டரை மட்டும் பார்த்து படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு ரொம்பப் பெரிய மனசு என்றார்.
‘ஒரு முகத்திரை’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கி விட்டார் சுரேஸ்.
ஆமாம், அடுத்து அடுத்து அஜித்தை வைத்து ஆழ்வார் படத்தை இயக்கிய செல்லாவின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். விரைவில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
வளர்க! வாழ்க!!