மாஸ் ஹீரோக்களையே மிஞ்சிய டாப்ஸி! : எந்த மேட்டர்ல தெரியுமா?

Get real time updates directly on you device, subscribe now.

tapsee

ஞ்சனையில்லாமல் கவர்ச்சி காட்டும் ஹீரோயின்களில் டாப்ஸியும் ஒருவர்.

அப்படிப்பட்டவருக்கு கவர்ச்சியோடு நடிப்பும் வரும் என்று நிரூபிக்கும் படமாக தமிழில் அமைந்தது தான் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா 2’.

இப்படத்தின் தாறுமாறான வசூல் வெற்றிக்குப் பிறகு தமிழில் டாப்ஸி ஒரு ரவுண்டு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ தனது வண்டியை பாலிவுட் பக்கம் திருப்பி விட்டார்.

கைவசம் மூன்று ஹிந்திப் படங்களை வைத்திருக்கும் டாப்ஸி மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம் நாம் ஷபானா.

ஷிவம் நாயர் இயக்கத்தில் டாப்ஸி, அக்‌ஷய் குமார், பிருத்விராஜ், மனோஜ் பாஜ்பாய், அனுபம் கேர் மற்றும் பலர் நடிக்க ஹிந்தியில் தயாராகியுள்ள இந்தப்படம்
தமிழில் ‘நான்தான் ஷபானா’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஹிந்திப் படம் ரிலீசாகும் மார்ச் 31ம் தேதியன்றே தமிழிலும் ரிலீசாகிறது.

இந்தப்படம் தயாராவதற்கு இன்னொரு காரணமே டாப்ஸியின் நடிப்பு தான். ஆமாம் ஏற்கனவே ஹிந்தியில் வெளிவந்த ‘பேபி’ திரைப்படத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே வரும் ஷபானா என்ற கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தைத் தான் இப்போது மேம்படுத்தி ‘நாம் ஷபானா’ என்ற பெயரில் படமாகவே இயக்கியிருக்கிறார் ஷிவம் நாயர்.

அதுசரி தமிழில் அவ்வளவு பெரிய ஹிட்டைக் கொடுத்து விட்டு பாலிவுட் பக்கம் போனது ஏன் என்றால் அதில் என் மீது எந்தத் தவறும் இல்லை என்கிறார் டாப்ஸி.

ஆமாம் சார், நான் தமிழில் தொடர்ந்து நடிப்பதற்கு ஆர்வமாகத்தான் இருக்கிறேன். ஆனால் காஞ்சனா 2 படத்துக்குப் பிறகு தமிழில் எனக்கு நல்ல கதைகள் அமையவில்லை. என்னை இப்போதும் ஒரு ஆங்கிலோ இண்டியன் பெண்ணாகவே பார்க்கிறார்கள். ஹிந்தியில் அப்படியில்லை அங்கு என்னை ஒரு பக்கத்து வீட்டுப் பெண் போல பார்க்கிறார்கள். நாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்கள் வருகின்றன என்று சொல்லும் டாப்ஸிக்கு ஹிந்தியில் இது 6-வது படமாம்.

நான் தான் ஷபானா படத்தில் ஒரு உளவாளியாக நடித்துள்ள டாப்ஸி உளவாளி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே உளவாளிகள் பற்றி பல விஷயங்களைக் கேட்டும் பல புத்தகங்களைப் படித்தும் தெரிந்து கொண்டிருக்கிறார்.

அது மட்டுமா? மாஸ் ஹீரோக்களையே மிஞ்சும் விதத்தில் படத்துல எனக்கு நான்கு சண்டைக்காட்சிகள் உண்டு, அதுக்காகவே மார்ஷியல் ஆர்ட்ஸ் ட்ரெயினிங் போனேன். பெற்றேன். ஸ்டண்ட் சீன்கள்ல நடிக்கிறப்போ காயங்கள் கூட ஏற்பட்டுச்சி.

என்று சொல்லும் டாப்ஸிக்கு ஒரே ஒரு வருத்தம் தான். தமிழில் நான் நடித்த ஒன்றிரெண்டு படங்களைத் தவிர மீதி எல்லாமே வெற்றிப் படங்கள் தான் அப்படியிருந்தும் ஏன் எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்று தெரியவில்லை என்கிறார்.

வெற்றிமாறன் தான் மறுபடியும் மனசு வைக்கணும் போல…