‘ஆவி’ கதையாக இருந்தாலும் தெர்மாகோல் போட்டு மூட முடியாது! : கமல்ஹாசன் கல கல பேச்சு!

Get real time updates directly on you device, subscribe now.

kamal1

டந்த மூன்று நாட்களாக மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை ஆற்றில் செய்த நீர் ஆவியாகாமல் தடுப்பதற்காக ஆரம்பித்து வைத்த தெர்மாக்கோல் திட்டம் தான் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட்டிங். உலகமே நகைச்சுவையாகப் பார்த்த அந்த நிகழ்வை நடிகர் கமலும் தன் பங்குக்கு கலாய்த்தார்.

ஜீவா – ஸ்ரீதிவ்யா நடிப்பில் அட்லி தயாரித்திருக்கும் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் கமல்ஹாசன்.

முன்னதாகப் பேசிய இயக்குநர் ஐக் ”கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்” என்று சொல்வது வழக்கம். அதில் ஒரு சினிமா எடுத்து பார் என்ற வாக்கியத்தையும் சேர்க்கணும். அவ்வளவு கஷ்டம் முதல் படத்தை எடுத்து முடிப்பது. என் குருநாதர்கள் பிரியதர்ஷன் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரிடமும் தான் நான் சினிமாவை கற்றுக் கொண்டேன். நா.முத்துக்குமார் கடைசியாக படுக்கையில் இருந்தபோது எழுதி கொடுத்த வரிகளை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது என்றார்.

Related Posts
1 of 34

ஐக் கதை சொல்ல வந்த போது கமல்ஹாசனின் உதவியாளர், ”விஸ்வரூபம்” படத்தில் எல்லாம் வேலை செய்தவர் ஹாலிவுட் ரேஞ்சில்
படம் இருக்கும் என நினைத்து தான் கதை கேட்க ஆரம்பித்தேன். ஆனால் முற்றிலும் மாறாக குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்றார் படத்தின் நாயகன் ஜீவா.

பின்னர் பேசிய கமல்ஹாசன் ”சினிமா ரசிகர்களுக்கே உண்டான பெருமை உங்களுக்கு முன்னாடியே நான் ட்ரெய்லரை பார்த்து விட்டேன் என் சொல்லிக் கொள்வது தான். அப்படி இந்த படத்தின் ட்ரெய்லரை நான் பார்த்து விட்டேன் என சொல்வதில் எனக்கு பெருமை. இந்தப் படம் நன்றாக கவர் செய்யப்பட்ட படம், தெர்மாகோலால் அல்ல. ‘ஆவி’ படம் என்றவுடன் தெர்மாகோல் நினைவிற்கு வந்து விட்டது. இருந்தாலும் ஆவி கதையாக இருந்தாலும் அதை தெர்மாக்கோல் போட்டு மூட முடியாது என்பதைத்தான் அப்படிச் சொன்னேன். இதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என காமெடியாக பேசி விட்டு விழா மேடையை கைதட்டல்களாலும், சிரிப்பு சத்தங்களாலும் அதிர வைத்தார் உலக நாயகன் கமல்ஹாசன்.

விழாவில் நாயகன் ஜீவா, நாயகி ஸ்ரீதிவ்யா, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் சிஇஓ விஜய் சிங், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், நடிகர் கிருஷ்ணா, பாடலாசிரியர் விவேக், பாடகி சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.