எதிர்பார்ப்பை கிளப்பும் பாயும் ஒளி நீ எனக்கு!
மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் பாயும் ஒளி நீ எனக்கு . விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது வாணிபோஜன் கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் குணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவரின் படங் களிலும் பணிபுரிந்து இருக்கிறார். ஒளிப்பதிவு ஸ்ரீதர், இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் சாகர். தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் படக் குழுவினர் கலந்துகொண்டனர்.