மகனுக்காக ‘ஆண்பாவம்’ படத்தை ரீமேக் செய்கிறார் ஆர்.பாண்டியராஜன்
ஆர்.பாண்டியராஜன் இயக்கி நாயகனாக நடித்து 1985ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ஆண் பாவம்’. பாண்டியன், ரேவதி, சீதா, வி.கே.ராமசாமி, ஜனகராஜ், கொல்லங்குடி கருப்பாயி மற்றும் பலர் நடித்த படம்.
கிராமத்துப் பின்னணியில் காதல், நகைச்சுவை, குடும்பம் என அனைத்து ரசிர்களுக்குமான படமாக அந்தப் படம் அமைந்தது பெண்களை அதிகம் கவர்ந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்தப் படத்தை இப்போது ‘ஆண் பாவம் 99%’ என்ற பெயரில் இந்தக் காலத்திற்கேற்ப மாற்றி ஆர்.பாண்டியராஜன் மீண்டும் இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் ஆர்.பாண்டியராஜன் நடித்த கதாபாத்திரத்தில் அவருடைய மகன் பிருத்விராஜன் பாண்டியராஜன் நடிக்க உள்ளார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வெளிவந்த ‘வஜ்ரம்’ படத்தைத் தயாரித்த ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி சார்பில் இப்படத்தை R.சங்கர் தயாரிக்கிறார், நிர்வாக தயாரிப்பு K.சிவசங்கர்.
கேரளாவில் உள்ள ஒட்டப் பாலத்தில் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.