பறந்து போ- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

நவீனயுகத்தின் நெருக்கடியான வாழ்விலிருந்து சற்றுப் பறந்து போக வைக்கும் முயற்சியே இந்தப் பறந்து போ

மகன் மிதுல் ரயனின் வளமான கல்விக்காக ஈ.எம்.ஐ, அனுசரித்து வாழ்தல் என நிறைய கஷ்டங்களைச் சந்திக்கிறார்கள் மிர்ச்சி சிவாவும் அவர் மனைவி கிரேஸ் ஆண்டனியும். மகனுக்காக எல்லாவற்றையும் கடக்கும் இவர்கள், மகனை கவனிக்காமல் இருக்கிறார்கள். இதை உணர்த்தும் விதமாக சிறுவன் மிதுல் ரயன் சில வால் தனங்களைச் செய்கிறான். அது வாழ்வை வேறு கோணத்தில் பார்க்க வைக்கிறது

கதாநாயகன் மிர்ச்சி சிவா என்றாலும், கதையின் நாயகனாக வலம் வருவது மிதுல் ரயன் தான். அவனின் குட்டிக் குட்டி ரியாக்சன்ஸ் எல்லாமே அடிப்பொலி ரகம். அவனின் டயலாக் மாடுலேசன் பாடிலாங்குவேஜ் உள்பட அனைத்துமே இயக்குநர் ராமால் செதுக்கப்பட்டுள்ளது. கிரேட்றா பையா! மிர்ச்சி சிவா தன் வழக்கமான கவுண்டர்களால் சிரிக்க வைக்கிறார். ஒரு பணக்கார வீட்டில் ஆடும் நடனத்திற்குப் பின் கலங்கவும் வைக்கிறார். சிவாவின் மனைவியாக வரும் கிரேஸ் ஆண்டனி சிறப்பான நடிப்பால் க்ளைமாக்ஸ் வரை நம்மை ரசிக்க வைக்கிறார். அஞ்சலி சற்று நேரமே வந்தாலும் பின்னியெடுத்துள்ளார். அவரின் கணவர் கேரக்டரும் ஆசம்

சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் எல்லாம் வசனம் பேசுகின்றன. அதைக் கேட்பதற்கு அவ்வளவு எதார்த்தமாக உள்ளது. மதன் கார்க்கி வரிகள் அவ்வளவு வசீகரம். ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு பாசிட்டிவ் அம்சம். பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜாவோடு சந்தோஷ் தயாநிதியும் இசைத்துள்ளார். சிறப்பு

வாழ்வில் தினம் தினம் சந்திக்கும் திண்டாட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சற்று கொண்டாட்ட மனநிலையைப் பெறுங்கள் என்கிறது இந்தப் பறந்து போ. தியேட்டரில் குடும்பத்தோடு காண வேண்டிய படமிது
3.75/5