தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடி : சமந்தாவுக்கு ஒன்றரை கோடி!

Get real time updates directly on you device, subscribe now.

samantha

விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் என பிரபல இசையமைப்பாளர்களும் அடுத்தடுத்து ஹீரோ அவதாரமெடுத்து வருகிறார்கள். இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

நல்ல வேளையாக அவர் ஹீரோவாக அறிமுகமாவது தமிழில் இல்லை. தெலுங்கில்!

தமிழை விட தெலுங்கில் பிஸியான இசையமைப்பாளராக இருப்பதால் தனது ஹீரோ அறிமுகம் அங்கு இருப்பது தான் சிறப்பு என்கிற முடிவுக்கு வந்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாக பல நடிகைகளை கேட்டுப் பார்த்திருக்கிறார்கள்.

Related Posts
1 of 16

கேட்ட நடிகைகள் எல்லோருமே ஒவ்வொரு பதிலைச் சொல்லி பேக்கடித்து விட சமந்தாவோ வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்.

டேட்ஸ் இல்லை என்று சொல்வதற்குப் பதிலாக ஒன்றரை கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.

படத்தை தயாரிப்பது தில் ராஜூவாச்சே..? ஒன்றரை கோடி தானே அதற்கென்ன கொடுத்தால் போச்சு என்று சமந்தா கேட்ட சம்பளத்துக்கு ஓ.கே சொல்லி விட்டாராம்.

இதென்னடா வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டோம் என்று பேந்த பேந்த முழித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா.