ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற “பரோல்” பட டிரெய்லர் !
TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார், மேலும் டிரெய்லரில் கதைக்கு அவர் வாய்ஸ் ஓவரும் தந்திருந்தார். டிரெய்லரில் படத்தின் காட்சியமைப்புகளும், நடிப்பும் ஒரு அழுத்தமிகு தரமான படைப்பாக ‘பரோல்’ இருக்குமென்பதை உறுதி செய்திருந்தது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
#Parole #பரோல்