அமலாபால் – விஜய் டைவர்ஸ்? : இதுதான் காரணமா?

Get real time updates directly on you device, subscribe now.


vijay

‘தெய்வத் திருமகள்’ படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்யுடன் காதலில் விழுந்த அமலாபால் பல மாதங்கள் அந்தக் காதலை ரகசியமாகவே வைத்திருந்தார்.

கொழுத்த மீன் எத்தனை நாள்தான் வலையில் தங்கும் என்பது போல இந்த காதல் ஜோடியின் காதல் சமாச்சாரம் மீடியாக்களிடம் கசிந்தது.

செய்தி உண்மை என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொள்ள ஒரு சுபயோக சுபதினத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தேறியது.

திருமணத்துக்குப் பிறகு பெரும்பாலும் நடிகைகள் படங்களில் நடிப்பதில்லை. அமலாபாலும் அப்படி ஒரு முடிவைத்தான் இயக்குநர் விஜய்யின் குடும்பத்தார் எடுக்கச் சொன்னார்கள்.

Related Posts
1 of 88

ஆனால் அமலாபாலோ இன்றுவரை அடுத்தடுத்து வாய்ப்புகள் வருவதால் படங்களில் நடித்து வருகிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பதையும் தாண்டி இப்போது தனுஷ் ஜோடியாக ‘வட சென்னை’ படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகியிருக்கிறார் அமலாபால்.

மூன்று பாகங்களாக எடுக்கப்பட இருக்கும் அந்தப்படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் அந்தப்படத்தில் நீ நடிக்க வேண்டாம் என்று இயக்குநர் விஜய் சொன்னதாகவும், அவர் பேச்சை அமலாபால் கேட்காததும் இப்போது இருவருக்குமிடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கியிருப்பதாக செய்திகள் உலா வருகிறார்.

இதுதான் பிரிவுக்கு முக்கிய காரணம் என்றால் இல்வாழ்க்கையை முழுமையாக வாழ அமலாபால் விஜய்யின் கோரிக்கையை பரிசீலனை செய்வது பேரழகு!