புதிய வரலாறை உருவாக்கிய பதான்!

Get real time updates directly on you device, subscribe now.

அலைமோதும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க இந்தியா முழுவதும் பதான் படத்திற்காக நள்ளிரவு 12 30 மணி காட்சிகளை இணைத்த யாஷ் ராஜ் பிலிம்ஸ்.மிக நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பதான் இன்று வெளியாகி உள்ளதுடன், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸை புயல் போல அடித்து நொறுக்கி உள்ளது. (ஜன-26) குடியரசு தின விடுமுறையாக என்பதால் படத்தை பார்க்க குவியும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் இன்று முதல் நள்ளிரவு 12.30 மணி காட்சியை இந்தியா முழுவதும் திரையிடுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Related Posts
1 of 10

ஏற்கனவே இந்திய சினிமா வரலாற்றில் உலகெங்கிலும் கிட்டத்தட்ட 8000 திரைகளில் மிகப்பெரிய அளவில் திரையிடப்படும் இந்திப் படம் என்கிற பெயரை பதான் திரைப்படம் பெற்றுள்ளது.ஷாருக்கான், தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் என நாட்டின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களை கொண்டுள்ளதுடன், பதான் திரைப்படம் ஆதித்ய சோப்ராவின் லட்சியமான ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாகவும் உருவாகி உள்ளது.