மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாராகும் பிரபாஸின் ‘சாஹூ’

Get real time updates directly on you device, subscribe now.

prabhas

ந்தியாவின் மிகச் சிறந்த காவிய திரைப்படங்களில் ஒன்றான பாகுபலியின் நட்சத்திர நாயகன் பிரபாஸ் மீண்டும் மக்கள் மனதை கவர மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் “சாஹூ” மூலம் தயாராகி விட்டார்.

‘பாகுபலி 2’ம் பாகத்தின் எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தியா முழுவதும் உள்ள பிரபாஸின் ரசிகர்கள் அவருடைய அடுத்த படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளில் இறங்கி விட்டார்கள். பாகுபலியில் தன்னுடைய முக்கிய பங்களிப்பின் மூலம் இன்று எல்லா தரப்பு மக்களின் மனதிலும் இடம் பிடித்து விட்ட பிரபாஸ், திரைத்துறை, ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்பவர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் கூட அவரது அடுத்த படத்தை வெள்ளித்திரையில் காண்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையொன்றுமில்லை.

பாகுபலியில் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட அக்கறையும், கடின உழைப்பும், மகத்தான முயற்சிகளும், முன்னேற்பாடுகளும் ‘பாகுபலி 2’ பற்றிய ஆவலையும் எதிர்பார்ப்புகளையும் மிகவும் அதிகப்படுத்தியுள்ளன.

Related Posts
1 of 21

ஆனால், சாஹூவில் நீங்கள் சந்திக்க இருக்கும் பிரபாஸ் முற்றிலும் மாறுபட்டவர். ஒரு வித்தியாசமான பின்புலத்தில், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், வித்தியாசமான கதைகளத்தோடு பிரம்மாண்டமாக, உயர் தொழில்நுட்பத்துடன் அதிரடியும் காதலும், விறுவிறுப்பும், வேகமும் சரிவிகிதத்தில் சற்றும் குறைவில்லாமல் ரசனையோடு கலந்து பிரமாதமாக தயாராகி வருகிறது.

“சாஹூ” ஒரு புதுமையும், ரசனையும் உற்சாகமும் கலந்த ஒரு ஜனரஞ்சகமான படைப்பு. இந்திய திரையுலகின் பல பெரிய முன்னணி நடிகர் நடிகைகளும் இதில் பங்கு பெறுவது மேலும் ஆவலை கூட்டுகிறது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரம்மாண்டமாக, பல புதிய இடங்களில் படம்பிடிக்கப்பட்டு வரும் இந்த படத்தை இயக்குனர் சுஜீத் இயக்க, வம்சி மற்றும் பிரமோத் அவர்களின் யூவீ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அமிதாப் பட்டாச்சார்யா பாடல்களுக்கு, சங்கர்-எஹ்சான்-லாய் இசையமைக்கிறார். மதியின் ஒளிப்பதிவும், சாபுசிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் சாஹூ தொடர்ந்துப் படமாக்கப்பட்டு வரும் நிலையில், பிரம்மாண்டமாய் அதிக திரையரங்குகளில் அடுத்த வாரம் வரவிருக்கும் ”பாகுபலி 2” படத்துடன் நீங்கள் சாஹூவின் டீஸரை காணலாம்.