”நான் பக்கா தமிழ்ப் பொண்ணு!” : பெருமிதப்படும் சாய் பல்லவி

Get real time updates directly on you device, subscribe now.

sai-pallavi

‘பிரேமம்’ மலையாளப் படத்தில் மலர் டீச்சராக ரசிகர்களை வசீகரித்தவர் சாய் பல்லவி.

தற்போது தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வரும் இவரை ‘மல்லு நடிகை’ என்றும், தமிழ் நடிகர் ஒருவரை காதலித்து வருகிறார். விரைவில் அவரையே திருமணம் செய்யப் போகிறார் என்று ரசிகர்களிடம் அடையாளப்படுத்தி வருகின்றன தெலுங்கு ஊடகங்கள்.

Related Posts
1 of 4

அதைப் பார்க்கும் தெலுங்கு ரசிகர்களும் சாய் பல்லவி கேரளாவைச் சேர்ந்தவர் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நான் தமிழ்ப் பொண்ணு என்று மல்லு நடிகை முத்திரைக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் சாய் பல்லவி.

என்னை ‘மலையாளி’ என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் படம் மலையாளத்தில் அமைந்ததால் அப்படி நினைத்திருக்கலாம், ஆனால் நான் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த பக்காவான தமிழ்ப்பெண். அதனால் என்னை தெலுங்கு ஊடகங்கள் தயவு செய்து ‘தமிழர்’ என்றே குறிப்பிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.