அடப்பாவிகளா… சாப்பாட்டு விஷயத்திலுமா புரளியை கெளப்புவீங்க..?
சென்னை தி.நகரில் உள்ள கல்யாண் ஜீவல்லர்ஸ் நகைக்கடையை திறந்து வைக்க தனது மருமகளோடு வந்திருந்தார் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். கூடவே நாகர்ஜூனா, புனித் ராஜ்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
அமிதாப் வந்தால் சும்மா அனுப்ப முடியுமா? கடையை திறந்து வைத்த கையோடு வந்திருந்த ஸ்டார்களை தனது வீட்டுக்கு கூட்டிச்சென்று தடபுடலான விருந்து வைத்து அசத்தினார் இளைய திலகம் பிரபு.
அந்த தடபுடலான விருந்து நடக்கும் புகைப்படம் இணையதளங்களில் லீக்காகி பெரும் பரபரப்பை கிளப்பியது. என்ன காரணம் தெரியுமா? வந்தவர்கள் எல்லோரும் தங்கத்தட்டுகளில் விருந்து சாப்பிட்டார்கள் என்பது தான் அந்த பரபரப்புக்குக் காரணம்.
ஆனால் இதை மறுத்திருக்கிறார் நடிகர் பிரபு. என்னோட அப்பா சிவாஜியோட மறைவுக்குப் பிறகு முதல்தடவையா அமிதாப்பச்சன் எங்க வீட்டுக்கு வந்தார். அவரோட வருகையை சிறப்பாக்கணும்னு தான் விருந்துக்கு ஏற்பாடு பண்ணினேன்.
வீட்டுக்கு வந்த அமிதாப் அப்பாவோட போட்டோவுக்கு மரியாதை செலுத்தி விட்டு வீட்ல உள்ளவங்களோட டைம்பாஸ் பண்ணினார். வந்தவங்களுக்கு செம்பு முலாம் பூசப்பட்ட தட்டுகள்ல வாழை இலையை வெச்சு சாப்பாடு போட்டோம். ஆனா சிலபேர் நாங்க தங்க தட்டுல சாப்பாடு போட்டதா புரளியை கெளப்பி விட்டுட்டாங்க… என்று கூறியிருக்கிறார் பிரபு.
அடப்பாவிகளா… சாப்பாட்டு விஷயத்திலுமா புரளியை கெளப்பி விடுவீங்க..?