மீண்டும் காதலில் விழுந்த பிரபுதேவா! – சிக்கிய நடிகை யார் தெரியுமா?

முன்னணி நடிகையான நயன்தாராவின் இரண்டாவது காதலராக வலம் வந்தவர் டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான பிரபுதேவா.
நயன்தாரா தன் கையில் ‘பிரபு’ என்று பச்சைக் குத்திக் கொள்கிற அளவுக்கு இருவருடைய காதலும் ரொம்பவும் நெருக்கமாக இருந்தது. திருமணம் செய்யக் கூடிய சூழல் வந்த நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு அதனால் வந்த மனஸ்தாபம் காரணமாக காதல் ஜோடி பிரிந்து விட்டது.
அதன்பிறகு பிரபுதேவா – நயன்தாரா இருவருக்குள்ளும் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லாமல், அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தற்போது இயக்கம், நடிப்பு என பிஸியாக இருக்கிறார் பிரபுதேவா. நயன்தாராவோ ஒரு பக்கம் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் இயக்குனர் விக்னேஷ் சிவனை மூன்றாவது காதலராக பிக்ஸ் செய்து கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்.

விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கோலிவுட்டில் சொல்லப்படுகிற நிலையில் நயன்தாராவைப் பிரிந்த பிறகு எந்த நடிகையுடனும் இணைத்து அடிபடாத பிரபுதேவாவின் பெயர் மீண்டும் ஒரு நடிகையுடன் இணைத்து அடிபட ஆரம்பித்திருக்கிறது.
‘மெர்க்குரி’ என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார் பிரபுதேவா. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ‘மேயாத மான்’ படத்தில் வைபவ்வுக்கு தங்கையாக நடித்த இந்துஜா. இந்த இந்துஜாவுக்கும், பிரபுதேவாவுக்குமிடையே தான் தற்போது காதல் மலர்ந்திருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்!
படப்பிடிப்பில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த போது அடிக்கடி சந்தித்து பேசுகிற வாய்ப்பு அமைந்ததால் அந்தச் சந்திப்பு தற்போது காதலாக மாறியிருக்கிறதாம்.
இருவருமே இதுகுறித்து வாய் திறக்கவில்லை என்றாலும் தகவல் உண்மை என்கிறார்கள்.
கத்தரிக்காய் கொஞ்சம் முத்தட்டும்! அதுக்கப்புறம் கடைத்தெருவுக்கு தானாவே வந்துடும்!