விஜய்யின் 60-வது படம் : சுடச் சுட புதிய தகவல்கள்

Get real time updates directly on you device, subscribe now.

vijay2

ட்லீ இயக்கத்தில் ‘தாறுமாறு’வில் நடித்து வரும் விஜய் அதைத் தொடர்ந்து நடிக்கப் போகும் 60-வது படத்தை இயக்கப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது.

எஸ்.ஏ.சூர்யா தான் இயக்குவார் என்றும், தனி ஒருவன் இயக்குநர் மோகன் ராஜாவுக்கு அதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகின.

பின்னர் இருவருமே இல்லை என்று முடிவாக பரதன் கதை எழுத, ஹரி இயக்குகிறார் என்று புதிய தகவல் வெளியானது.

Related Posts
1 of 77

ஆனால் இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டு விஜய்க்கு பிடித்த கதையை எழுதிய பரதனே 60-வது படத்தை இயக்கப் போகிறார் என்று உறுதியான தகவல் வந்திருக்கிறது.

வசனம் எழுதுவதில் பிரபலமான பரதன் ஏற்கனவே விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப்படம் சரியாகப் போகாததால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘காக்டெயில்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அதிதி’ படத்தை இயக்கினார். அதன்பிறகு இப்போது விஜய்யின் 60-வது படத்தை இயக்க கமிட்டாகியிருக்கிறார்.

ஜெயம் ராஜா, எஸ்.ஜே.சூர்யா, கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ் என தமிழின் பிரபல இயக்குநர்கள் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் பரதன் இயக்குவது குறிப்பிடத்தக்கது.

கே.எல்.பிரவீன் எடிட்டிங் செய்ய மதி ஒளிப்பதிவு செய்கிறார். அஜீத்தை வைத்து வீரம் படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.