மெளனகுரு இயக்குனரின் அடுத்த படம் ‘மகா முனி’

Get real time updates directly on you device, subscribe now.

‘மெளனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்யா நடிக்கும் புதுப்படம் ஒன்றை இயக்குகிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்துக்கு ‘மகாமுனி’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

Related Posts
1 of 11

இதில் ஆர்யாவுடன் மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், க்ரைம் தில்லர் ஜானரில் தயாராகும் இப்படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். என்றார் இயக்குனர் சாந்தகுமார்.