இனி நான் டான்ஸ் மாஸ்டர் இல்லை : என்ன பிரபுதேவா இப்படி ஒரு வார்த்தையை சொல்லிப்புட்டீக..?
தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார் பிரபுதேவா. அதோடு சொந்தமான தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி தமிழில் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.
ஹிந்தியில் அவருடைய மார்க்கெட் ஸ்டெடியாக இருப்பதால் அடுத்தடுத்து ஹிந்திப் படங்களை இயக்குவது தொடர்பாக அங்குள்ள முன்னணி ஹீரோக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
புயல்வேக நடனத்தில் பல சாதனைகளை படைத்தவர் என்பதால் ”தென்னிந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்” என்கிற அடையாளம் இன்னும் அவரை விட்டுப் போகவில்லை. என்னதான் பிஸியான இயக்குநராகி விட்டாலும் அவ்வப்போது சில படங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர் திடீரென்று அப்படி ஒரு முடிவை எடுத்தது தான் ”என்ன பிரபுதேவா இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க..?” என்று திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
விஷயம் இதுதான்.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக் கும், ‘ஜனதா காரேஜ்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துத் தர பிரபுதேவாவிடம் கேட்டுப் பார்த்தார்களாம்.
ஆனால் அவரோ நான் டைரக்டரான பிறகு படங்களை இயக்குவதில் மட்டுமே இப்போதைக்கு கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் இனி நான் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரியப்போவதில்லை என்று அதாவது இனி நான் டான்ஸ் மாஸ்டரே இல்லை என்கிற அர்த்தத்தில் பதில் சொல்லி திருப்பி அனுப்பி விட்டாராம்.