மீண்டும் கதாநாயகியாக ஆசைப்படும் முதல்வரின் மனைவி?!
செய்தியின் டைட்டிலைப் பார்த்ததும் தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நடிகை யார் என்று யோசிக்காதீங்க… இது நம்ம அண்டை மாநிலமான கர்நாடகம் மேட்டர்.
தமிழில் ஷாம் நடித்த ‘இயற்கை’, ‘வர்ணஜாலம்’ உட்பட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதிகா.
பெங்களூரூவைச் சேர்ந்த இவர் தமிழில் மார்க்கெட் டவுணாகவும் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவுக்குச் சென்று அங்கு சில கன்னடப்படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அங்கும் நடிக்காமல் போனவர் அடுத்து என்ன ஆனா? எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.
திடீரென்று ஒருநாள் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமியை ரகசிய திருமணம் செய்து கொண்ட தகவல் லீக்கானது. ராதிகாவும் அதை ஒப்புக்கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ராதிகா 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘ருத்ர தாண்டவா’ கன்னட படத்தில் அரிதாரம் பூசியவர் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசையாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அதுவரை ஓ.கே ஆனால் மீண்டும் நான் கதாநாயகியாக நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறியிருப்பது தான் கன்னட இயக்குநர்களை கண்கலங்க வைத்திருக்கிறது.
சி.எம்மோட மனைவி நீங்க ஆசைப்படலாம்… ரசிகர்கள் பாவமில்லையா..?