பிரசாந்த் தனி ஒருவன் ஆவாரா?

Get real time updates directly on you device, subscribe now.

சென்றாண்டு ஹிந்தியில் வெளியாகி சக்கைப் போடு போட்ட படம் “அந்தாதுன்”.
இப்படத்தில் ஆயுஸ்மான் குரானா பார்வையற்ற இளைஞர் வேடத்தில் நடித்திருந்தார். ராதிகா ஆப்தே, தபு போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இப்படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியிருந்தார். இதனால் அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே இப்படத்தில் பிரசாந்த் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தை ‘ஜெயம்’ ‘தனி ஒருவன்’ ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன்ராஜா இயக்கவிருக்கிறார். ஒருகாலத்தில் இளம் நடிகர்களில் தனி ஒருவனாக வலம் வந்த பிரசாந்திற்கு தனி ஒருவம் பட இயக்குநரால் ஒரு தனித்த இடம் கிடைக்க பலபேர் பிராத்திக்கிறார்கள். பார்க்கலாம்.