‘ப்ரேமம்’ செம ஹிட்டு : ஆனா ரெண்டு தமிழ்ப்படங்களோட அப்பட்டமான காப்பியாம்..?!
உலகம் முழுவதும் சூர்யாவின் ‘மாஸ்’ ரிலீசான மே 29-ம் தேதி தான் கேரளாவில் ‘பிரேமம்’ என்ற மலையாளப் படம் ரிலீசானது.
‘நேரம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தயாரான இந்தப் படத்திலும் அதே ‘நேரம்’ ஹீரோ நிவின்பாலி தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார்.
ரிலீசான வேகத்தில் செம பிக்கப் ஆன இப்படம் தான் இப்போது கேரளா முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. என்றாலும் படத்தை பார்த்து விட்டு வரும் ரசிகர்களோ “அட.. இது அட்டகத்தி, ஆட்டோகிராப் தமிழ்ப் படங்கள்ல இருந்து சீன்களை சுட்டெடுத்த படம் மாதிரி இருக்கே..?’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.
போதாத குறைக்கு தமிழை வேறு படத்தில் திணித்திருக்கிறார்களாம்.
இருந்தாலும் வசூல் குறையாததால் உற்சாகத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ”என்னை மாதிரி ஹிட் படம் எடுக்கிறதுக்கு இந்தியாவுலேயே ஆள் இல்ல…” என்கிற ரேஞ்சில் சிலாகித்துக் கொண்டிருக்கிறாராம்.
இதோடு முடியவில்லை விவகாரம். இந்தப் படம் ஹிட்டான விஷயத்தை கேள்விப்பட்ட ஒரு பிரபல தமிழ்ப்பட தயாரிப்பாளர் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.
இதைக் கேள்விப்பட்ட கோடம்பாக்க பிரபலங்களோ என்னடா ”இது சுட்ட படத்துக்கு இவ்வளவு மவுசா..?” என்று என்று சொல்லி சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.
பின்குறிப்பு : ‘அட்டகத்தி’ படம் கேரளாவில் மட்டும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.