டான்ஸ்னாலே கை, கால் உதறும்! : 10 படங்கள் நடிச்ச ஹீரோவுக்கு வந்த சங்கடத்தைப் பாருங்க!

Get real time updates directly on you device, subscribe now.

aswin1

சில ஹீரோக்களுக்கு எந்தவிதமான கேரக்டரைக் கொடுத்தாலும் அதற்கு முடிந்தவரை உயிர் கொடுத்து பிரித்து மேய்ந்து விடுவார்கள். ஆனால் டான்ஸ், ஸ்டண்ட் என்றால் சில ஹீரோக்களுக்கு உதறல் எடுக்கும். இதை பல மேடைகளில் சில இளம் ஹீரோக்கள் வெளிப்படையாகப் பேசியிருந்தாலும் அந்த லிஸ்ட்ல நானும் இருக்கேன் என்பது போல பேசினார் திரி படத்தின் ஹீரோ அஸ்வின் காகமனு.

சீ ஷோர் கோல்டு புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்திருக்கும் படம் தான் ‘திரி’. இதில் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தொடர்ந்து அஸ்வின் காகமானு, ஸ்வாதி மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆடியோ பங்ஷன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன் இசைத் தகட்டை வெளியிட தயாரிப்பாளர் ரகுநாதன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நாயகன் அஸ்வின் இந்தப்படம் கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, ஒரு யதார்த்தமான கமர்ஷியல் படம். எடிட்டர் ராஜா சேதுபதியும் படத்தில் என்னோடு நடித்திருக்கிறார். எனக்கு டான்ஸ்னாலே கால் உதறும். இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து முடிந்தவரை ஆடியிருக்கிறேன். கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் என்றவர் இதுவரை 10 படங்கள் தமிழில் நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நான் பிரிவியூக்களில் படம் பார்ப்பதில்லை. அங்கே உண்மையை நம் கண்கள் காட்டி கொடுத்து விடும். ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்ப்பது தான் பிடிக்கும். இயக்குனர் அசோக் அமிர்தராஜ் யாரிடமும் வேலை செய்ததில்லை. அவரே தயாரிக்க முடிவெடுத்திருந்தார். அந்த நேரத்தில் தான் பாலகோபி போல சரியான ஆட்கள் படத்துக்குள் வந்தார்கள். நான் கருத்து சொல்வது மாதிரியே நிறைய படங்கள் என்னை தேடி வருகின்றன. கருத்து சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. நல்ல கதாபாத்திரம் அமைந்தால் போதும் என்றார் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயபிரகாஷ்.

பல படங்களுக்கு, இயக்குனர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் தான் பாலகோபி. 20 வருடங்களுக்கு முன்பே எனக்கும் பல படங்களுக்கு உறுதுணையாய் இருந்தவர். அவர் தயாரித்திருக்கும் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் ஆடியை வெளியிட்ட தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன்.

திரி படத்தில் கமிட்டான போது 3 படங்கள் தான் நடித்துக் கொண்டிருந்தேன். கமிட்டான பின் 15 படங்களில் ஒப்பந்தம் ஆனேன். அதனால் இந்த படத்தில் சில நாட்கள் நடிக்க முடியவில்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் நடிகர் சென்ட்ராயன்.

465 படங்களை பார்த்து விட்டு தான் படம் இயக்கவே வந்தேன். துருவங்கள் 16, மாநகரம் போல படங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் யதார்த்தமான கமர்ஷியல் படமா? என்று நினைக்க வேண்டாம். நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். என் நண்பர்கள் தான் எனக்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றார் இயக்குனர் அசோக் அமிர்தராஜ்.

நாயகி ஸ்வாதி ரெட்டி, தயாரிப்பாளர் ரகுநாதன், காமன் மேன் கணேஷ், எடிட்டர் ராஜா சேதுபதி, இசையமைப்பாளர் அஜீஷ், அனுபமா குமார், அர்.ஜெய், டேனி, தளபதி தினேஷ் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.