ரோமியோக்களின் நெஞ்சங்களில் வட்டமிடும் ‘ஜூலியட்’ ஹன்சிகா
ஹன்சிகா!
பெயரை கேட்டாலே புன்னகை நம் உதடுகளில் ஒட்டிக் கொள்ளும். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றிற்கு ஒன்று வித்தியாசமாய் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்து எடுக்கும் விதமாகட்டும், நல்ல கதைகளில் நடிக்கும் இயல்பாகட்டும், அனைவருக்கும் உதவும் குணமாகட்டும் அனைத்தும் ஹன்சிகாவை இன்னும் ஒருபடி தமிழ் ரசிகர்களிடையே அவரை நெருக்கம் ஆக்கியுள்ளது. எங்கேயும் காதல் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இவர் மீண்டும் இணைந்திருக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரை வாழ்க்கை, சொந்த வாழ்க்கை எனத் தன்னை என்றும் புத்துணர்வாய் வைத்து கொள்ளும் ஹன்சிகா “2015- ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதி ‘ரோமியோ ஜூலியட்’ ‘புலி’ படங்களின் வருகையால் மிகப்பெரியதாய் அமையப் போகிறது.
‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படத்தில் ஒரு விமான பணிப்பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது.
நான் செல்லும் இடமெங்கும் என்னை ‘ஜூலியட்’ என்று தான் என்னை அழைக்கிறார்கள், ஒரு படத்தின் கேரக்டரின் பெயரால் அழைக்கப்படுவது எந்த ஒரு நடிகைக்கும் பெருமை மட்டுமல்ல பெருமிதமான விஷயம் கூட. ரோமியோ ஜூலியட் திரைப்படம் எனக்கதை தந்துள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி.” என தன் விலை மதிப்பில்லா புன்னகையுடன் விடைபெற்றார் தமிழக ரோமியோக்களின் ஜூலியட் ஹன்சிகா.