”இனிமேல் நடிக்கவே கூடாது” : ப்ரியா ஆனந்த்தின் முடிவை மாற்றிய டைரக்டர்!
ஓரளவுக்கு லட்சணமாகவும் இருக்கிறார், அழகாகவும் இருக்கிறார். இருந்தும் கூட எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லையே என்கிற வருத்தம் தான் ப்ரியா ஆனந்த்துக்கு!.
அவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் பெட்டிக்குள் சுருண்டது தான் அதற்கு முக்கிய காரணம். அதனாலேயே இனி படங்களில் நடிக்கவே வேண்டாம் என்கிற ப்ரியா ஆனந்த்தின் முடிவுக்கு முடிவு கட்டியிருக்கிறார் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ இயக்குநர் த.செ.ஞானவேல்.
‘மாநகரம்’ படத்தைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் நாயகனாக அசோக் செல்வன் நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்திருக்கிறார்.
முதல் பெஞ்ச் மாணவியான ப்ரியா ஆனந்த் மிடில் பெஞ்ச் மாணவனான அசோக் செல்வனை லவ்வுவது தான் படத்திலிருக்கிற சுவாரஷ்யம்.
”இனி எந்தப் படத்திலும் நடிக்கக் கூடாது என்று நினைத்திருந்த என்னை இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் கதை கேட்டதும் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டி விட்டு விட்டது. அந்தளவுக்கு பாஸிட்டீவ்வான கதையிது.’’ என்றார் ப்ரியா ஆனந்த்.
அடுத்து பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ”பல பிரச்சனைகளை தாண்டி, தடைகளைத் தாண்டி ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் வருகிற ஜூலை 28 ஆம் வெளியாக உள்ளது. தற்போது தயாரிப்பாளர்கள் தான் படத்தை வெளியிட சண்டை போடுகிறார்கள். மக்கள் யாரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க தயாராக இல்லை. ”மக்களுக்காக தான் சினிமா, சினிமாவுக்காக மக்கள் அல்ல” என்றார்.