கன்பார்ம் ஆயிடுச்சு : காதலரையே திருமணம் செய்கிறார் பிரியாமணி

Get real time updates directly on you device, subscribe now.

priyamani

‘பருத்தி வீரன்’ வெற்றி பெற்றும் தொடர்ந்து எதிர்பார்த்த பெரிய ஹீரோக்களின் படங்கள் அமையாததால் தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்தார் ப்ரியாமணி.

அங்கு வண்டி சில ஆண்டுகள் போய் சரக்கு தீரவும், மலையாளம், கன்னடம் என மற்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தார்.

இதற்கிடையே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு வேலையை செய்து வரும் முஸ்தபா என்பவரை பார்ட்டி ஒன்றில் சந்தித்தார் ப்ரியாமணி. அவரோடு தனது காதலை ரகசியமாக வளர்த்து வந்தவர் இப்போது அந்தக் காதல் திருமணத்தில் முடியப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பெங்களூரில் வசிக்கும் ப்ரியாமணி தற்போதைக்கு கன்னட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகும் நடிக்க காதலர் தடையில்லையாம்.

நடிகைகளின் காதல் கல்யாணத்தில் முடிவதெல்லாம் அபூர்வம், அந்த நிலையிலும் பல ஆண்டுகளாக நட்பில் ஆரம்பித்து காதலாக மாறி, பின்பு தனது சுக, துக்கங்களில் பங்கெடுத்தவரையே திருமணம் செய்வது ஆச்சரியம் தானே..?

இந்த நல்ல மனசுக்கே நீங்க ரெண்டு பேரும் வாழ்க பல்லாண்டு!