கோபமடைந்த கூட்டத்தை எதிர்கொள்ளும் காஜல் அகர்வால்!

Get real time updates directly on you device, subscribe now.

Zee Studios மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் மனித உடல்நலத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சமூக அக்கறை கொண்ட நீதிமன்ற பின்னணித் திரைப்படம், உண்மை சம்பவங்களின் தாக்கத்தை வலுவான திரைக்கதையுடன் எடுத்துரைக்கிறது.

வெளியான புதிய போஸ்டரில், காஜல் அகர்வாலும் ஷ்ரேயாஸ் தல்படேவின் பதற்றமான சூழ்நிலையில் கோபமடைந்த பொதுமக்கள் கூட்டத்தால் சூழப்பட்டிருப்பது காணப்படுகிறது. காய்கறி சந்தையின் நடுவே நடைபெறும் இந்தக் காட்சியில், வியாபாரிகள் இருவரையும் நோக்கி காய்கறிகளை வீசுவதும், குற்றம் சாட்டுவதும் இடம்பெற்றுள்ளது. உண்மையை வெளிக்கொணர முயலும் நபர்கள் சந்திக்கும் எதிர்ப்பையும் சமூகத்தின் கோபத்தையும் இந்த போஸ்டர் வலுவாக பிரதிபலிக்கிறது.

போஸ்டரில் இடம்பெற்றுள்ள “Slow Poison in Progress…” என்ற வாசகம், மெதுவாக மனிதர்களின் வாழ்வை பாதிக்கும் மறைமுக அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி, படத்தின் மையக் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.