‘கபாலி’க்கு கூப்பிடல… கலங்கி நிக்குது ‘அட்டகத்தி’ புள்ள…

Get real time updates directly on you device, subscribe now.

Nanditha1

கொஞ்சம் பூசினாற்போல இருக்கும் நடிகைகளைப் போலவே, தெத்துப்பல் நடிகைகளுக்கும், காந்தக் கண் அழகிகளுக்கும் ரசிகர்களின் ஆதரவுக்கரம் எப்போதுமே நீளும்.

இந்த இரண்டு அம்சங்களும் கொண்டவரைத்தான் ‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ரஞ்சித்.

அடுத்தடுத்து இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, உப்புக்கருவாடு என பல படங்களில் நடித்து வந்தாலும் பேர் சொல்கிற அளவுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் மட்டும் அமையாமல் இருந்தது.

இடையில் சிம்புதேவன் அழைத்து புலி படத்தோட ப்ளாஸ்பேக் விஜய்க்கு நீங்க தான் ஜோடி என்றதும் தூக்கத்தைத் தொலைத்த நந்திதா அதை வைத்தே முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் இடம் பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டார்.

சுமார் 18 நாட்கள் அவரது காட்சிகளை எடுத்ததால் நம்பிக்கையோடு இருந்தவர் படம் ரிலீசானது.

Related Posts
1 of 18

கண்ணைச் சிமிட்டித் திறப்பதற்குள் காணாமல் போகிற கேரக்டரைப் பார்த்து ஷாக்.

ஒரு வழியாக மனசைத் தேற்றியவருக்கு அடுத்து தன்னை இயக்கிய ரஞ்சித் ரஜினியை வைத்து கபாலியை இயக்குகிறார் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டதும் கண்டிப்பா இதுல நமக்கு ஒரு பெஸ்ட் ரோல் கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருந்தார்.

ஆனால் கபாலி படப்பிடிப்பு பாதி முடிந்து விட்டது, ரஞ்சித்திடமிருந்து அழைப்பு தான் வரவில்லை.

இனிமேலும் வராது ஏன் தெரியுமா? அந்தக் கேரக்டரில் தான் இப்போது மெட்ராஸ் படத்தில் நடித்த ரித்விகா நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

கவலையோடு கலங்கி நிக்குது பெங்களூரு பிகரு…