‘காரி’ படத்தின் பர்ஸ்ட்லுக்!

Get real time updates directly on you device, subscribe now.

என்னதான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையவே இல்லை.. அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களின் பிரதிபலிப்பாக திரையில் தோன்றி ரசிகர்களை வசியப்படுத்தும் வெகு சில கதாநாயகர்களில் நடிகர் சசிகுமார் ரொம்பவே முக்கியமானவர்.அந்தவிதமாக மீண்டும் கிராம பின்னணியில் பிரம்மாண்டமாக, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் ‘காரி’ என்கிற புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் சசிகுமார்.

Related Posts
1 of 5

கதாநாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் செம்பருத்திப்பூ, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த 21ஆம் நூற்றாண்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மேலும் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார்.படத்தின் போஸ்டரே இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.