அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்படம் புஷ்பா

தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இன்று மொழிகளைத் தாண்டி பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக ரூபாய் 1.25 கோடியை மத்திய மாநில அரசுகளுக்கும், கொரோனா வைரஸ் பரவலால் வேலை இழந்து வாடும் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 25 லட்சமும் வழங்கி அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் “புஷ்பா” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. தமிழில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது!
தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா மற்றும் 2 என இரு படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இணையும் மூன்றாவது படம் “புஷ்பா”