சரியான நேரத்தில் நீண்ட அஜித்தின் கரம்
“அஜித்குமார் தரப்பில் இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை” என்ற டாக் மீடியா மத்தியில் அதிகமாகிக் கொண்டே இருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் நேற்று மாலை அவர் நிவாரணத்தைத் தொகையை அறிவித்து விட்டார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு ₹50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு ₹50 லட்சமும் வழங்கிய அவர், சினிமாத் தொழிலார்களுக்கும் பயன்படும் வகையில் பெப்ஸி யூனியனுக்கு ₹25 லட்ச ரூபாயையும் வழங்கியுள்ளார். அஜித் நீட்டிய இந்த உதவிக்கரம் சரியான நேரத்தில் வந்துள்ளதால் பெப்ஸி தொழிலார்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்கிறார்கள். மேலும் முன்னணி நடிகர்களில் அஜித் தனது நீண்ட கரத்தை நீட்டியுள்ளதால் இனி அடுத்தடுத்த நடிகர்கள் தங்கள் தாராள மனதைக் காட்டுவார்கள் என்று நம்பலாம்!